தாரிகா பானு
தாரிகா ஒரு தேசத்த்தின் வளர்ச்சியை அதன் திசையை தீர்மானிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது .நம் தேசத்தில் அத்தகைய கல்வி எத்தகைய பங்கு வகிக்கிறயது என்பதை திருநர் சமூகமாகிய நாங்கள் கல்வி கேட்டு அத்துறையின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது நேருக்குநேர் எதிர்கொள்கிறோம் .எங்களின் எதிர்கோள்கள் நிறைய இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிற பள்ளிகளில் நாங்கள் எதிர்கொண்ட பாலினதீண்டாமை !அதனினும் உச்சம்! "தீண்டாமை ஒரு பாவச்செயல் !தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!" என்ற அம்மாபெரும் சொற்றொடர் புத்தகங்களின் முதல் பக்கத்தில் மரணித்திருப்பதை தாரிகாவை பள்ளியில் சேர்த்துகொள்ளாமல் புறக்கணித்த ஆசிரியர்கள் ,அதிகாரிகள் வாயிலாக நேரே உணர்ந்தோம்! எங்களுக்கு கல்வி வழங்க கூட முடியாமல் இந்த தேசம் ஏன் இயலாமையின் உச்சத்தில் இருக்கிறது ?இத்தகைய இயலாமையின் அடிபடையாக இருக்கிற திருநர் பற்றிய புரிதலை ,திருநர் உடல் இயங்கியலை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?இத்தேசத்தின் தலையாயதாக கருதப்படுகின்ற உச்சநீதிமன்றமே கல்வி,வேலைவாய்ப்பில் எங்களுக்கு முன்ன...