Posts

Showing posts from March, 2016

நடக்க முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு....பி.ஜே.பி அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கைக்கு மக்கள் விரோத காங்கிரஸ் சாக்கு............

கடந்த 2014 ஏப்ரலில் இந்நாட்டின் தலையாய மன்றமாக கறுதப்படுகின்ற உச்சநீதிமன்றம் திருநங்கை,திருநம்பியருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டங்களை மத்தியிலும் மாநிலங்களிலும் இயற்றுங்கள் என்று சொன்ன பிறகும்,தனிநபர் மசோதா ,திரு.திருச்சி சிவா அவர்களால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தி ன் மாநிலங்களவையில் முன் மொழியப்பட்டு ,அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.(அதை சமூக நீதி அதிகாரமளித்தல் துறை (social justice)அமைச்சகம் காதோடு காது வைத்தாற் போல இணையத்தில் கருத்துக் கேட்டு பல மாற்றங்களை தன் விருப்பத்திற்கு மாற்றியதென்பது வேறு) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 03 ஆம் தேதி சமூக நீதி அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் திரு.தவார் காண்ட் கெலாட் “உச்ச நீதி மன்றமே இயற்றிட உத்தரவிட்ட திருநங்கை திருநம்பி மசோதா, விவாதத்திற்கு மக்களவையில் காத்திருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் நேஷனல் ஹெரால் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கிறது என்பதாகவும் கூறியிருந்தார்.ஆனால் அதன் பிறகு ஹெரால்ட் போனது,,,ரோ...